மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. காலில் விழுந்து கதறியதால் மன்னித்து சென்ற பெண்மணி.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடை சார்ந்த தொழிலதிபர் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று, தொழிலதிபரை பார்க்க உறவினர் பெண் தனது தாய் மற்றும் தோழிகளோடு வருகைதந்திருந்தார். இதில், இளம்பெண்கள் பிரபல யூடியூபர்கள் ஆவார்கள்.
அந்த சமயத்தில், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த வாலிபர், கேரள பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிடவே, சத்தம் கேட்டு வந்த மக்கள் பெண்ணை காப்பாற்றினார். இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுவிட, பெண்மணி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி-யை ஆய்வு செய்துள்ளனர்.
சி.சி.டி.வி காட்சியில் வாலிபரின் உருவம் பதிவாகியிருந்த நிலையில், அவர் கோயம்புத்தூர் மச்சக்காளிபாளையம் பகுதியில் வசித்து வரும் 24 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. விருதுநகரை பூர்வீகமாக கொண்ட இளைஞர், சவுரிபாளையத்தில் உள்ள டீ கடையில் வேலைபார்க்கிறார்.
அவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள், பெண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, பெண்மணி சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் வருகைதரவே, இளைஞரிடம் அறிவுரை கூறி கண்டித்து இருக்கிறார். இளைஞரோ தனது குடும்ப நிலையை தெரிவித்து தன்னை மன்னித்துவிடுமாறும் கதறியுள்ளார். இளைஞரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பெண்மணி, வழக்குபதிய வேண்டாம் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, பெண்ணின் வாதத்தை ஏற்றுக்கொண்ட காவல் அதிகாரிகள், இளைஞரிடம் அறிவுரை கூறி கண்டித்து எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.