மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மாட்டுக்கறி சாப்பிடும் நீ, புர்காவை கழற்றி ஷூவை சுத்தம் செய்" - கோவையில் 7ம் வகுப்பு சிறுமிக்கு நடந்த கொடுமை.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அசோகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில், முஸ்லீம் மதத்தை சேர்ந்த சிறுமி 7ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த சிறுமியின் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருபவர், சிறுமியிடம் நீ மாட்டுக்கறி சாப்பிடுவாயா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவரின் மதத்தை குறிப்பிட்டு, அவரைபோன்றவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். ஆகையால் நீ புர்காவை அவிழ்த்து, பிற மாணவர்களின் செருப்பை சுத்தம் செய் என கொடுமைப்படுத்தியுள்ளார். மாட்டுக்கறி சாப்பிடுவோருக்கு திமிர் அதிகம் என்றும் கூறியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமி தனது தந்தையிடம் தெரிவிக்கவே, அவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் பலனில்லை. மேற்கூறிய சம்பவம் பலமுறை நடந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சம்பவத்தன்று விஷயம் தொடர்பாக துடியலூர் காவல் நிலையம், முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் புகார் அளித்துவிட்டு, செய்தியாளர்களிடமும் தங்களின் மனவேதனையை சிறுமியின் தந்தை பகிர்ந்துகொண்டார். இதனையடுத்து, அரசுப்பள்ளியில் சிறுமிக்கு நடந்த கொடுமை அம்பலமானது.
இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்ட ஆசிரியர், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.