மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: கோவை ஈஷா மையத்தில் பேரதிர்ச்சி.. 28 வயது இளைஞர் தற்கொலை.. பரபரப்பு சம்பவம்.!
ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த இளைஞர் திடீரென தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்திற்கு பல மாநிலங்களை சார்ந்தவர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம், கொள்ளு கிராமத்தை சேர்ந்த ரமணா (வயது 28) என்ற இளைஞர் ஈஷா மையத்திற்கு வந்துள்ளார்.
அவர் மன அழுத்தத்தை குறைக்க ஈஷா மையத்திற்கு வந்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில், ரமணா திடீரென ஈஷா மையத்தில் வைத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக ஆலந்துறை காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ரமணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளைஞர் ரமணாவின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரமணா தற்கொலை செய்துகொண்டாரா? எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? யோகா மையத்தில் யாருடனேனும் பிரச்சனை நடந்ததா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.