திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கல்லூரி மாணவரை காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி 25 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை; கோவையில் சோகம்.!
படிக்கும் போது காதலில் விழுந்த கல்லூரி மாணவி திருமணத்திற்கு பின் மர்ம மரணம் அடைந்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாணி சாலை, மத்வராயபுரம் குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் சஞ்செய் (வயது 20). அங்குள்ள கல்லூரியில் பி.காம் சி.ஏ 2ம் ஆண்டு படிக்கிறார். அங்குள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ரமணி (வயது 20). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாகி மாறியது.
இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதல் வீட்டிற்கு தெரியவந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து, காதல் ஜோடி கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறது.
மகளை காணவில்லை என ரமணியின் பெற்றோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் காதல் ஜோடி திருமணம் செய்த தகவலை உறுதி செய்தனர். திருமணத்திற்க்கு பின்னர் காதல் ஜோடி நேரில் காவல் நிலையத்தில் ஆஜராக, அங்கு பெண்மணி கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்.
பெண்ணின் பெற்றோர் காதல் ஜோடியை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், இறுதியில் சஞ்செய்யின் பெற்றோருடன் ரமணி அனுப்பி வைக்கப்பட்டார். தம்பதிகள் மத்வராயபுரத்தில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 24ம் தேதி திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதனிடையே, ரமணியுடைய தந்தை தனது மகளுக்கு தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
மகளின் மீது ஆத்திரத்தில் இருந்த தந்தை மகளை கடுமையக பேசி, உனது உடமைகளை வீட்டிற்கு வந்து எடுத்து சென்றுவிடு என திட்டி இருக்கிறார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரமணி வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், ரமணியின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரமணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.