மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவர், 2 குழந்தைகளை விட்டு இளைஞருடன் ஓட்டம் பிடித்த 25 வயது இளம்பெண்; கள்ளக்காதல் சவகாசத்தால் கண்ணீரில் கணவன்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். அப்பகுதியில் திருமணம் ஆகாத இளைஞர் வசித்து வந்துள்ளார்.
இளைஞருக்கும் - இளம் பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். தனது வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில், கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து பெண் உல்லாசத்தில் இருந்துள்ளார்.
நாளடைவில் கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவர, அவர் தனது மனைவியை கண்டித்து கள்ளக்காதலை கைவிட வற்புறுத்தி இருக்கிறார். இதனால் தம்பதிகளிடையே குடும்ப தகராறு ஏற்பட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுள்ள 5 வயது இளைய மகனை வீட்டிற்கு அழைத்து வருவதாக புறப்பட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. அவரின் கள்ளகாதலனும் மாயமாகிய தகவல் அறிந்ததால், இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
பள்ளிக்கு சென்ற மகனே வந்துவிட்டான், மனைவியை காணவில்லையே என தேடலில் ஈடுபட்ட கணவருக்கு தாத்தாமாக விஷயம் புரியவந்துள்ளது. இதனையடுத்து, பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.