மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் பெயரில் சிறுமியை திருமணம் செய்து அனுதினமும் பலாத்காரம் : கர்ப்பிணியாக சிறுமி, கம்பிவைத்த சிறையில் காதலன்.!
சிறுமிக்கு கோவிலில் வைத்து தாலிகட்டி, குடித்தனம் என்ற பெயரில் அத்துமீறிய 19 வயது இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகையில் வசித்து வரும் 17 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கெளதம் (வயது 19). இவர் கூலித்தொழிலாளி ஆவார். இருவரும் அடுத்தடுத்த வீட்டை சேர்ந்தவர்கள் என்பதால், நட்புடன் பழகி வந்துள்ளனர்.
இந்த பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவருMinம் கடந்த ஒரு ஆண்டாக ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று தனது காதலியை கோவிலுக்கு அழைத்து சென்ற கெளதம், அவரை திருமணம் செய்துள்ளார்.
பின், சிறுமிக்கு திருமண வயது வந்துவிட்டது என பெற்றோரிடம் கூறி, தனிவீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்படவே, உறவினர்கள் சிறுமியை மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியாகவே, அவர் திருமண வயதை எட்டாதவர் என்ற தகவலும் அம்பலமானது. இதனையடுத்து, இதுகுறித்து காவல் துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு விரைந்து வந்த சிறுமுகை காவல் துறையினர் விசாரணை நடத்தி கௌதமின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.