திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதலிக்கு ஓய்வூதிய பணத்தை கொடுத்து, மகனால் கொல்லப்பட்ட தந்தை.. பகீர் சம்பவம்..!
ஓய்வூதிய பணத்தை, கள்ளக்காதலிக்கு கொடுத்த தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியகுளம் பகுதியில் வசித்து வருபவர் கருப்புசாமி (வயது 61). இவர் பி.ஆர்.எஸ் வளாகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி வசந்தி மற்றும் இவரது மகன் சுரேஷ். இவரது மகன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கருப்பசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் விமலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த பழக்கம் சிறிது நாட்களில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், தான் பெற்ற ஓய்வுதியம் முழுவதையும் விமலாவிடம் கொடுத்துள்ளார். இதன் காரணமாக கருப்புசாமி மற்றும் சுரேஷ் இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கருப்புசாமி டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு அண்மையில், விமலா வீட்டு வாசலில் படுத்துள்ளார்.இதனை கண்ட சுரேஷ், கருப்புசாமியை அருகாமையில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று 'ஓய்வுதிய பணம் எங்கே? எப்பொழுது வந்தது? ஏன் இன்னும் தரவில்லை?' என கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அப்போது கோபமுற்ற கருப்புசாமி 'அதெல்லாம் உனக்கு எதுக்கு' என வாக்குவாதம் செய்துள்ளார். அத்துடன் சிறிதுநேரத்தில் இவர்களது வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்புசாமியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் கருப்புசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின் இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் கருப்புசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.