மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியுடன் காதல்.. கர்ப்பமானதும் ஜூட் விட்ட வடக்கன்.. சொந்த ஊருக்கே சென்று தட்டிதூக்கிய அதிகாரிகள்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியை சேர்ந்த சிறுமி, தனது குடும்பத்துடன் கூலித்தொழிலாளியாக வறுமை காரணமாக வேலைபார்த்து வந்துள்ளார். இவருடன் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞரும் வேலைபார்த்திருக்கிறார்.
இந்நிலையில், சிறுமியை தனது காதல் வலையில் வீழ்த்திய வடமாநில இளைஞர், சிறுமியுடன் நெருங்கி பழகியதாக தெரியவருகிறது. இதனால் சிறுமி கர்ப்பமாகவே, இத்தகவலை காதலனிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
சிறுமி கர்ப்பமான விஷயத்தை அறிந்த இளைஞரோ, தனது சொந்த ஊருக்கு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற அதிகாரிகள், ஓம்பிரகாஷ் (வயது 24) என்பவருக்கு எதிராக வழக்குப்பதிந்து, ராஞ்சி சென்று கைது செய்தனர்.
அவரை கோவைக்கு அழைத்து வந்த சூலூர் காவல் துறையினர், நீதிமாற்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.