மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா வார்டில் இருந்து கைதி தப்பியோட்டம்.. கஜேந்திரனுக்கு காவல்துறை வலைவீச்சு.!
கோயம்புத்தூர் டவுன் ஹால், இரயில் நிலையம் நல்லாம்பாளையம் பகுதியில் இருக்கும் கோவிலில், கடந்த 2020 ஆம் வருடம் ஒரே இரவில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்த காவல் துறையினர், சேலத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.
அவரின் மீது இருதரப்பு மக்களிடையே கலவரம் ஏற்படும் முயற்சி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒன்றரை வருடமாக சிறை தண்டனை அனுபவித்து வந்த கஜேந்திரனுக்குக்கு, கடந்த 27 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து, கஜேந்திரன் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளித்து வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
அவரை காவல் துறையினர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் தலைமறைவான கைதி கஜேந்திரனை தேடி வருகின்றனர்.