மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயதில் காதல், 16 வயதில் பலாத்காரம்... சிறுமியை சீரழித்த வழக்கில் 16 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்..!
16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். 14 வயதில் காதலில் விழுந்து, 16 வயதில் பலாத்காரத்திற்குள்ளான சிறுமியின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை, சோலையார் எஸ்டேட்டில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உடுமலைபேட்டையில் செயல்பட்டு வரும் நர்சிங் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு பல்லடம் கரடிவாவி பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக மாணவி தனது வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அவர் தனது காதலனான 16 வயது சிறுவனுடன் சென்றுள்ளார்.
சிறுவன் தனது வீட்டிற்கு சிறுமியை நயவஞ்சகத்துடன் அழைத்துச்சென்று திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்குள்ளாக மாணவி வீட்டிற்கு செல்லாததால் பதறிப்போன பெற்றோர் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அதிகாரிகள் சிறுமியை தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமி 16 வயது சிறுவனுடன் பல்லடத்தில் தங்கியிருப்பது உறுதியாகவே, இருவரையும் மீட்ட அதிகாரிகள் சிறுவனிடம் வால்பாறை காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். அப்போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகவே, சிறுவனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.