விவேக் எக்ஸ்பிரஸ் மோதி 20 வயது பெண் யானை நிகழ்விடத்திலேயே பலி; கோவையில் சோகம்...!



Coimbatore Vivek Express Hit Girl Elephant Died

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கோயம்புத்தூர் மாவட்டம் வழியே நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட இரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுக்கரையில் இருந்து கேரளாவின் வாளையார் வரையில் 12 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் இரயில் பாதை பயணிக்கிறது. இவ்வழியே யானைகள் கடந்து செல்வது இயல்பு. அவ்வப்போது யானைகள் இரயில் மீது மோதி பலியாகுவது உண்டு.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கூட வாளையாறு பகுதியில் 3 யானைகள் இரயில் மீது மோதி பலியாகி இருந்தது. இதனால் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சி.சி.டி.வி கேமிரா பொருத்தவும் முடிவுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், வாளையார் - கஞ்சிக்கோடு கொட்டாம்பட்டி பகுதியில் நேற்று 17 யானைகள் வலம்வந்துள்ளன. 

இவைகள் இன்று அதிகாலை 4 மணியளவில் இரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தபோது, கன்னியாகுமரியில் இருந்து அசாம் நோக்கி பயணம் செய்த விவேக் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது. இந்த இரயில் மோதியதில் 20 வயது பெண் யானை சம்பவ இடத்திலேயே பலியாகியானது. இந்த விஷயம் தொடர்பாக வனத்துறையினர், இரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.