#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேஸ்புக்கில் மலர்ந்த காதலால் பரிதாபம்.. பெண்ணை பலாத்காரம் செய்து, குடும்பமாக மிரட்டல்..! பேரதிர்ச்சி சம்பவம்.!
கேரள இளைஞருடன் முகநூல் வழியே பழக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்ட கோவையை சேர்ந்த பெண், இளைஞர் மற்றும் அவரின் குடும்பத்தினரால் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண், தனியார் நிறுவனத்தில் கம்பியூட்டர் ஆபரேட்டராக பணியாற்றுகிறார். கடந்த 2019 ஆம் வருடம் கேரளாவில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த வருண் (வயது 27) என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், பின்னாளில் தங்களின் அலைபேசி நம்பரை பகிர்ந்துகொண்டு பேச தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நட்பு காதலாக மலர்ந்த நிலையில், காதலியான உன்னை நான் நேரில் சந்திக்க வேண்டும் என வருண் கூறியுள்ளார். அவனது காதல் வலையில் விழுந்த இளம்பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கோவை வந்த அருண் தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கிய நிலையில், காதலனை சந்திக்க சென்ற காதலியிடம் ஆசை வார்த்தை கூறிய அருண் அத்துமீறி இருக்கிறார். இதனைப்போல, பலமுறை ஆசையை பேசி பலாத்காரம் செய்துள்ளார். இந்த காதல் விவகாரம் வருணின் தாய் ரேகா மற்றும் சித்தப்பா சந்தோஷ் பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் பேசியுள்ளனர்.
இருவருக்கும் இருதரப்பு சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்த நிலையில், வருண் காதலியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும், பெண் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த காரணத்தால், திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வருணின் வீட்டிற்கு சென்று பெண்மணி நியாயம் கேட்கவே, நல்லவர்கள் போல நடித்த தாயும் - சித்தப்பனும் தங்களின் சுயரூபத்தை காண்பித்துள்ளனர்.
இதனால் நிலைமையை உணர்ந்துகொண்ட பெண்மணி, கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் வருண், அவனின் தாய் ரேகா, வருணின் சித்தப்பா சந்தோஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.