திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆர்டர் செய்தது ஒன்று வந்தது ஒன்று.. பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! பிலிப்கார்ட் ஆர்டர் பரிதாபங்கள்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிளிப்கார்ட் தளத்தில் விலையுயர்ந்த தண்ணீர் பாட்டில் ஆர்டர் செய்துள்ளார். அவரது ஆர்டர் நேற்று டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
டெலிவரி செய்யப்பட்ட பொருளை அவர் எடுத்து பார்த்தபோது, பேரதிர்ச்சியாக சாதாரண பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி விஷயத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Flipkart ல ஆர்டர் போட்டதும் நமக்கு வந்ததும், சிரிக்கறதா கோவப்படறதா தெரியல 😁 pic.twitter.com/leW2WVg7uM
— saaraa (@saaraa_cbe) March 23, 2022
ஆன்லைன் டெலிவரியை பொறுத்தமட்டில் இதுபோன்ற எண்ணற்ற மோசடி செயல்கள் தொடர்கதையாகி வருகின்றன. செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பி வைத்த கொடுமையும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.