9ஆம் வகுப்பு சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம்.. ரகசிய தகவலால் தடுத்து நிறுத்திய ஆட்சியர்... பெற்றோருக்கு அறிவுரை..!



Collector stopped a child marriage

14 வயதான சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்தி பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் கணேஷ் நகர் பகுதியில் 22 வயதுடைய பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி.

இந்த நிலையில் பிரகாஷின் உறவினரான 14 வயது சிறுமி அவர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். 

இருவருக்கும் இன்று அதிகாலை பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர், சமூக நலத்துறை குழந்தை திருமண தடுப்பு குழுவினரிடம் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். childபின் அவர்கள் திருமணத்தை தடுத்து நிறுத்தியதும், பிரகாஷ் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், இரு வீட்டாரையும் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது குழந்தைகளை படிக்க வைக்க அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், படிக்கும் வயதில் திருமணம் செய்து கொடுப்பது சட்டப்படி குற்றம் எனவும் அறிவுரை வழங்கினார்.

இருவரையும் படிக்க வைக்க அறிவுறுத்திய ஆட்சியர், படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு பரிந்துரைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.