மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிவேகத்தில் பயணம்.. பசு மீது மோதி., கார் சக்கரத்தில் சிக்கி நடுரோட்டில் துள்ளத்துடிக்க இளைஞர் கொடூரமரணம்..!
சென்னையில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் விஷ்ணுவரதன் (வயது 21). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் தனது கல்லூரியில் பயிலும் சகமாணவரான சவுத்ரி (வயது 22) என்பவருடன் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க நேற்று புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்குள்ள ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை, அர்ஜுனன் தபசு போன்ற இடங்களை சுற்றிபார்த்து இருவரும் மீண்டும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வந்துகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வடநேம்மேலி பகுதியில் சாலையின் குறுக்கே பசுமாடு வந்த நிலையில், இவர்களின் இருசக்கரவாகனம் பசுமாடு மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்ததை தொடர்ந்து, விஷ்ணுவரதன் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து துடிதுடித்துள்ளார். அத்துடன் அவருக்கு பின்னால் வேகமாக வந்த காரும் அவரின் மீது ஏறவே, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், மாணவர் சவுத்ரி சர்வீஸ் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.