மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம்.. கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு.!
சாத்தூர் அருகே பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேது. இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் விடியல் தங்கி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இவரது உறவினர் வீடு வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு சேது அந்த கிராமத்திற்கு சென்ற போது, அந்த வீட்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தனியாக இருந்துள்ளார். அப்போது சிறுமி குளிப்பதை சேது தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அதன் பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி சிறுமியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளி சேதுபதி தீவிரமாக தேடி வருகின்றனர்.