மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருடர்களை விரட்டிச்சென்ற கல்லூரி துணை முதல்வர் பரிதாப பலி.! அதிர்ச்சி சம்பவம்.!
தஞ்சாவூர் மாவட்டம் எல்.ஐ.சி. காலனி பகுதியை சேர்ந்தவர் பேராசிரியர் ஜியாவுதீன். 57 வயது நிரம்பிய இவர் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் துணை முதல்வராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இவர் தொழுகைக்காக வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிவாசலுக்கு சென்றார்.
அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் எலிசா நகர் அருகே வந்தபோது அவரது செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து தனது இருசக்கர வாசகனை ஓரம்கட்டிவிட்டு செல்போனை எடுத்து பேசியுள்ளார். திடீரென வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது செல்போனை பறித்துச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜியாவுதீன் தனது செல்போனை பறித்துச்சென்ற திருடர்களை பிடிப்பதற்காக அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு விரட்டிச் சென்றார்.
அப்போது எதிர்பாராவிதமாக ரோட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீது மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில், சிகிச்சைபாலனின்றி ஜியாவுதீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.