மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாரோட காலேஜ் பெருசு?.. ஆபாச வார்த்தையால் திட்டி தாக்கிகொண்ட கல்லூரி மாணவிகள்.!! பகீர் சம்பவத்தின் பின்னணி இதோ.!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியில் 5-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அங்குள்ள சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த பல மாணவிகள் படித்து வரும் நிலையில், கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு இடையே யாருடைய கல்லூரி பெரியது? என்று தகராறு எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே கிராமத்தைச் சார்ந்த இரண்டு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பேருந்தில் பயணம் செய்தபோது, தங்களது கல்லூரியின் பெருமை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே இதனை கண்ட பயணிகள் கல்லூரிக்கு சென்று படியுங்கள் என்று அறிவுரை கூறி இருக்கின்றனர். ஆனால் நேற்று பேருந்துக்காக காத்திருந்தபோது திட்டக்குடி பேருந்து நிலையத்தில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி ஆபாச வார்த்தைகளால் திட்டி தலைமுடியைப் பிடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களை சமாதானப்படுத்த முயன்ற பயணிகளின் சொல்லையும் கேட்காமல் சர்ச்சையில் ஈடுபட்டதால் திட்டக்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.