மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எச்சரித்தும் காதலை கைவிட மறுத்ததால்... கல்லூரி மாணவர் அடித்து கொலை...!!
காதலை கைவிட மறுத்ததால் சிறுமியின் சித்தப்பா கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் காணை அடுத்த ஒரு கோடி கிராமத்தின் எல்லையில் உள்ள குளத்தின் அருகே இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக காணை காவல் துறைக்கு தகவல் வந்தது.
இதை தொடர்ந்து காணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த கொலை குறித்து காவல்துறையினர் செய்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் கப்பூர் காலனியைச் சேர்ந்த அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்த ராஜன் என்பது தெரியவந்தது.
ராஜனை நள்ளிரவில் மர்ம நபர்கள் நள்ளிரவில் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
சிறுமியின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜனிடம் சிறுமியின் சித்தப்பா சத்தியராஜ் காதலிக்க கூடாது என்று ராஜனை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்.
அதையெல்லாம் பொருட்படுத்தாத ராஜன் தொடர்ந்து சிறுமியை காதலித்து வந்ததால், அவரை கொலை செய்ய சிறுமியின் சித்தப்பா சத்யராஜ் முடிவெடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து நண்பருடன் ராஜனை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். மது அருந்தியதும் ராஜனை செங்கல்லால் அடித்துள்ளனர். கத்தியாலும் குத்தியுள்ளனர். ராஜன் இறந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் சத்யராஜ், கார்த்திக் இருவரையும் கைது செய்துள்ளனர்.