திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கல்லூரிக்கு சென்ற மாணவி பிணமாக வீட்டிற்கு திரும்பிய சோகம்.. இரயில் முன் பாய்ந்து விபரீதம்..!
கல்லூரி மாணவி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் திருக்கச்சூர் அம்பேத்கர் நகரை சார்ந்தவர் மாரிமுத்து. இவரின் மகள் நிரோஷா (வயது 20). நிரோஷா பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார்.
இவர் தினமும் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து தனது கல்லூரிக்கு மின்சார ரயிலில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை நேரத்தில் கல்லூரி செல்வதற்கு புறப்பட்ட நிரோஷா, சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு திடீரென சென்னை நோக்கி பயணம் செய்த மின்சாரரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் நிரோஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரின் கைப்பையை சோதனை செய்தபோது தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்ட நிலையில், அது விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.