செல்ஃபோன் விவகாரத்தால் விபரீதம்: ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை!. கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு..!



College student commits suicide by jumping in front of the train and accuses the college administration

கல்லூரி மாணவர் ஒருவர் ஆவடி ரயில்நிலையத்தில், ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த மோனிஷ்(17), திருமுல்லைவாயிலில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் காலேஜில் மெக்கானிக்கல் மூன்றாம் வருடம் படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை மோனிஷ் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காக காலேஜ் நிர்வாகம் அவரிடம் இருந்த செல்போனை வாங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

நேற்று காலேஜிக்கு சென்ற மோனிஷ் தனது செல்போனை கேட்டு காலேஜ் நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்துள்ளார். அவர்கள் செல்போன் தர மறுத்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான மோனிஷ் காலேஜிலிருந்து சுவர் ஏறி குதித்து ஆவடி ரெயில் நிலையம் சென்றுள்ளார்.

திருப்பதியிலிருந்து சென்னை செல்ல கூடிய சப்தகிரி ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த மோனிஷின் பெற்றோர் காலேஜ்  நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டி உள்ளனர்.