மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்! கண்ணிமைக்கும் நொடியில் உயிரிழந்த சோகம்!
திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் வசித்துவரும் செந்தில்குமாரின் மகன் மிதுன். 18 வயது நிறைந்த அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்றும் வழக்கம்போல கல்லூரிக்கு திருவள்ளுவர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்
அப்பொழுது அவர் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு தனது செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டு தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக சென்னையில் இருந்து கோவைக்கு சதாப்தி விரைவு ரயில் வந்துள்ளது. அது மிதுன் மீது மோதியதில் அவர் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அலறி கத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு செல்போனில் பாடல் கேட்டுக்கொண்டே சென்று கவனக்குறைவால் மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.