மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விருதுநகர் அருகே பெரும் சோகம்.. பிறந்த நாளே இறந்த நாளான சம்பவம்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சக்தி பிரகாஷ் என்ற கல்லூரி மாணவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சக்தி பிரகாஷ் தனது பிறந்த நாளை, தனது நண்பர்களுடன் பூங்கொடி கிராமத்தில் உள்ள விவசாய கிணறு அருகே மது அருந்தி கொண்டாடியுள்ளார்.
இந்த நிலையில் மது அருந்திய பிறகு அனைவரும் அருகில் உள்ள கிணற்றில் இறங்கி குளித்துள்ளனர். இதில் சக்தி பிரகாஷ் எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். அதன் பின்னர் கிணற்றில் சடலமாக கிடந்த சக்தி பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.