காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பாலியல் தொல்லை., ஆசைக்கு இணங்க மறுத்தால் சான்றிதழை தரமாட்டோம்.. கல்லூரி நிர்வாகத்தால் கதறிய மாணவி..! பதறிய பெற்றோர்.!!
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த முன்னாள் வழக்கறிஞர் மற்றும் மாணவியை மிரட்டிய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை ரயில் நிலையம் அருகே முன்னாள் அரசு வழக்கறிஞரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான செந்தில்குமார் கடந்த 20 ஆண்டுகளாக தனியார் நர்சிங் கல்லூரியை நடத்தி வருகிறார். இந்த கல்லூரியில் பல மாவட்டங்களை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கிபடித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு செந்தில்குமார் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதோடு நிறுத்திக்கொள்ளாமல் தனது ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
மாணவி ஆசைக்கு இணங்க மறுக்கவே, கல்லூரி விடுதி பணியில் இருந்து வரும் வடியத்தை சேர்ந்த அமுதவல்லி மற்றும் சமையலராக வேலை பார்க்கும் மணப்பாறையைச் செய்த மகாலட்சுமி இருவரும் "அவரின் ஆசைக்கு இணங்க மறுத்தால், உனது படிப்புச் சான்றிதழை வழங்க மாட்டோம்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதிர்ந்து போன சிறுமி தனது பெற்றோருடன் இது குறித்து கண்ணீருடன் கதறியழுது தெரிவித்துள்ளார். இதனை கேட்ட பின் பெற்றோர் கரூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற குளித்தலை மகளிர் காவல்துறையினர் விசாரணை செய்து செந்தில்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மகாலட்சுமி, அமுதவல்லி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக முன்கூட்டியே அறிந்த மகாலட்சுமி, அமுதவல்லி, செந்தில் குமார் ஆகிய மூவரும் தலைமறைவாகிய நிலையில், காவல்துறையினர் மகாலட்சுமியை கடந்த மே 27ஆம் தேதி மணப்பாறையில் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருந்த செந்தில்குமார் மற்றும் அமுதவல்லியை தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில், இருவரும் மேல்மருவத்தூரில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் உடனடியாக அங்கு விரைந்து சென்று இருவரையும் காவல்துறையினர் கைது செய்து குளித்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.