மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள்; வனப்பகுதியில் சடலம் மீட்பு.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!
கடந்த 2 நாட்களுக்கு முன் மாயமான கல்லூரி மாணவர் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் நண்பர்களால் அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம், கூத்தக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரின் மனைவி செந்தமிழ்செல்வி. தம்பதிகளுக்கு 19 வயதுடைய ஜெகன்ஸ்ரீ என்ற மகன் இருக்கிறார். இவர் தனியார் கல்லூரியில் DME மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
செந்தமிழ்ச்செல்வி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருக்கிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி ஜெகன் திடீரென மாயமாகியுள்ளார். அவரை தேடி அலைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள், எங்கு தேடியும் காணாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உறவினர்கள் சார்பிலும் போஸ்டர் அடித்து ஜெகன்ஶ்ரீயை தேடியுள்ளனர். மறுமுனையில் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், மாயமான ஜெகனின் உடல் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
நேற்று மாலை 5 மணியளவில் ஜெகனின் உடலை கண்டறிந்த காவல் துறையினர், நள்ளிரவு நேரத்தில் சடலத்தை தோண்டி எடுத்து மீட்டனர். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் ஜெகனின் நண்பர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் & வட்டம் தியாகதுருகம் ஒன்றியம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர்
— VCK Muthu Kuppusamy (@MuthuKuppusamy7) March 25, 2023
செந்தமிழ்ச்செல்வி அவர்களின் மகன் #ஜெகன் என்பவர் (24.3.2023) காணாமல் போய்விட்டார் யாரேனும் பார்த்தால் 7402060714 என்ற இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். pic.twitter.com/x8turGDGNn
நண்பர்கள் சேர்ந்து ஜெகனை கொலை செய்து உடலை வனப்பகுதியில் புதைத்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகவே, அவர்களிடம் கொலைக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மகன் கொலை செய்யப்பட்டுள்ளது அக்கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.