மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஸ்டா விளம்பரத்தால் இன்ஸ்டன்ட்டாக பணத்தை இழந்த மாணவி.. உயிரை துறந்த பரிதாபம்..!!
ஆன்லைன் முதலீட்டில் பணம் முதலீடு செய்த பெண் அதனை இழந்து தற்கொலை செய்தார்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் அதன் மூலமாக ரூ.30,000 பணத்தை முதலீடு செய்திருந்த நிலையில், அதனை இழந்ததாக தெரியவருகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்துவந்த மாணவி சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆன்லைன் வர்த்தகம் அல்லது ரம்மி போன்ற மோசடி விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.