மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலை தடுப்புச்சுவரில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப மரணம்..!
இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் அண்ணாமலை (வயது 20). இவர் ஆவடி அருகாமையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று இவர் அதே கல்லூரியில் பயிலும் தனது நண்பரான ஹரிஷ் என்பவருடன் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகனைத்தை அண்ணாமலை ஓட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர்கள் பட்டாபிராம் பகுதியை அடுத்த நிமிலிச்சேரி சர்வீஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தில் வேகமாக சென்ற நிலையில், இருசக்கர வாகனம் தடுப்பு சுவரின் மீது மோதியுள்ளது. இதில் அண்ணாமலை அருகிலிருந்த ஒரு மின் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மேலும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்துவந்த ஹரிஷ் கிட்டத்தட்ட 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழேவிழுந்து படுகாயமடைந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.