திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. பேருந்தில் தகராறு.. போலீசார் விசாரணை!
திருவாரூர் மாவட்டம் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கலை கல்லூரி மாணவர்களிடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி கல்லூரி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சீனியர் மாணவர் ஒருவர், ஜூனியர் மாணவியிடம் சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் வள வாய்க்கால் பகுதியில் ஜூனியர் சீனியர் என இரு தரப்பினர் இடையே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகராறில் படுகாயமடைந்த சீனியர் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.