கோயம்பேடு சந்தையை திறக்கோரி தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி காய்கறி மார்க்கெட் மூடல்.!



Coming 10th all vegetable and flower markets are close

கொரோனா வைரஸானது தமிழகத்தில் நாளுக்கு நாள் பரவி வருகிறது. தலைநகரான சென்னையில் கோயம்பேடு சந்தையில் முதலில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்த நிலையில் அதனை தற்காலிகமாக மூடினர். பிறகு திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக காய்கனி சந்தை திறக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோயம்பேடு மொத்த சந்தையை திறக்க கோரி, வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் திங்கள் கிழமை ( ஆகஸ்ட் 10 ) ஒருநாள் காய்கறிகள் , பூ மார்க்கெட் மற்றும் பழக்கடைகள் அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.

Vegetable

இதனால் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி அனைத்து சந்தைகள் மற்றும் பூ மார்க்கெட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.