திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அறந்தாங்கி அருகே பரபரப்பு.. அரசு பள்ளியில் திடீரென மயங்கி விழுந்த மாணவன்.. பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
புதுக்கோட்டை மாவட்டம் மேல்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் அறந்தாங்கி அருகே உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் மாரிமுத்து பள்ளியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்கான மணி அடிக்கப்பட்டது. இதனால் மாரிமுத்து தனது புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல புறப்பட்டு உள்ளார்.
அப்போது மாரிமுத்து திடீரென மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கண்ட சகமாணவர்கள் மாரிமுத்துவை எழுப்ப முயற்ச்சித்துள்ளனர். ஆனால் மாரிமுத்து நீண்ட நேரம் ஆகியும் எழுந்திரிக்காததால் அச்சமுற்ற சகமாணவர்கள் ஆசிரியர்களிடம் சென்று இதனைப் பற்றி கூறியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த ஆசிரியர்கள் மாரிமுத்துவை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மாரிமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் ஆனது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.