பசும்பொன்னில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்த செயல்.! தென்மாவட்டங்களில் எழுந்துவரும் கண்டனங்கள்.!



Condemnations that Stalin had insulted viboothi

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் தேதி அன்று தெய்வதிருமகன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேவுள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்தநிலையில் தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை நெற்றியில் பூசிக் கொள்ளாமல், விபூதியை ஸ்டாலின் கீழே கொட்டிவிட்டார். இதனால் ஸ்டாலின் தேவரை அவமதித்து விட்டதாக கடும் கண்டங்கள் எழுந்துவருகின்றன.

MK Stalin

தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவமரியாதையாக நடந்ததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என தென்னிந்திய  பார்வர்ட் பிளாக் நிறுவனர் கே.சி.திருமாறன் தெரிவித்துள்ளார். மேலும், முத்துராமலிங்க தேவர் ஆலயத்தில் வழங்கிய திருநீரை நெற்றியில் பூசாமல் ஆலயத்தில் உள்ளேயே தட்டிவிட்டுச் சென்றது தேவரின் பக்தர்கள், இந்துமதத்தினர் அனைவரின் மனதும் புண்படும்படியாக இருக்கிறது. இறை நம்பிக்கையற்ற கட்சியாக தன்னை காட்டிக்கொள்கின்ற திமுக இது போன்ற ஆன்மீக தளங்களுக்கு வராமல் இருப்பது மேல் என தெரிவித்துள்ளார்.