காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மதுரை - திருவனந்தபுரம் இரயிலை கவிழ்க்க சதி?: இரும்பு கம்பிகளை தண்டவாளத்தில் வைத்த விஷமிகள்.!
மதுரை ரயில்நிலையத்தில் இருந்து கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வழியே திருவனந்தபுரத்திற்கு அமிர்தா விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மதுரையில் மாலை 4:15 மணியளவில் புறப்பட்டு, திருவனந்தபுரத்திற்கு மறுநாள் அதிகாலையில் 4:25 மணிக்கு சென்றடைகிறது.
நேற்று முன்தினம் ரயில் வழக்கம் போல புறப்பட்ட நிலையில், இரவு 7:40 மணியளவில் பொள்ளாச்சிக்கு வந்துள்ளது. அங்கிருந்து கேரளா நோக்கி பயணத்தை தொடங்கவே, இரவு 8:00 மணியளவில் ஆனைமலை, மீனாட்சிபுரம் முதல்மடை பகுதியில் சென்று கொண்டே இருந்துள்ளது.
அச்சமயம் தண்டவாளத்தின் குறுக்கு ஒரு அடி உயரம் கொண்ட கம்பி கிடந்த நிலையில், அதன் மீது ரயில் மோதியதால் பெட்டிகள் குலுங்கியிருக்கின்றன. இதனால் பயணிகள் அச்சமடையவே, வித்தியாசமான சத்தம் வருவதை கேட்டு ரயில் ஓட்டுநர் நடுவழியில் ரயிலை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தபோது கம்பி தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனை அடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இரும்பு கம்பியை தண்டவாளத்தின் மீது வைத்தது யார்?, இது ரயிலை கவிழ்க்க நடந்த சதியா? என பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.