மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை.!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் உமர்முக்தர். 47 வயது நிரம்பிய இவருக்கு மூன்று பெண்களுடன் திருமணங்களாகி 3 மனைவிகளையும் பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள சின்னதாராபுரம் முதலியார் தெருவில் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த 5 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். அங்கு நடந்த சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உமர்முக்தரை கைது செய்தனா். இந்த வழக்கு கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி உமர்முக்தருக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதமும், அதனை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் அதனைக் கட்டத்தவறினால், மேலும், ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.