மக்களுக்காக உயிரை பணயம் வைத்து பணி புரியும் போலீசாரையும் விட்டுவைக்காத கொரோனா!



Corona affected police

சென்னையில் உதவி ஆய்வாளர் உட்பட மேலும் 5 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நடிகர் சங்க தேர்தல் ஒட்டுப்பெட்டிகளை காவல் காத்த காவல் அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

உலகத்தை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா போராளிகளாக திகழ்ந்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் என பலரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் போலீசார் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

corona

இதற்கு முன்னர் போலீசார் 18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உட்பட 6 போலீசார் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. புதிதாக பாதிக்கப்பட்ட 6 போலீசார்கள் கொரோனா தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தினரும், சார்ந்தவர்களும் பரிசோதனை செய்யப்பட்டனர்.

கொரோனவால் உலகமே வீட்டுக்குள் முடங்கி இருக்கும் வேளையில் மருத்துவர்கள், செவிலியர்கள், கொரோனா தடுப்பு பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மக்களுக்காக அவர்களின் உயிரை பணையம் வைத்து அயராது பாடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து கொரோனாவை ஒழிக்க முற்றிலுமாக பாடுபடுவோம்.