கொரோனாவுக்காக புதிய செல்போன் செயலி அறிமுகம்! செல்பி எடுத்து அனுப்பினால் போதும் மருத்துவக்குழு வீடு தேடி வரும்!



corona app

கொரோனா காரணமாக புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி ஏதேனும் இருந்தால், செல்போனில் ஒரு செல்பி எடுத்துஅனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளிவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தோற்று பரவல் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வருகிறது. தமிழக அரசும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத்தில் பல இடங்களில் அவசர கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவக்குழுவினரால் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா குறித்த தகவல் பரிமாற்றத்துக்காக பிரத்யேக செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

corona

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் கட்டாயம் தங்கள் வீடுகளில் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தெடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் குறித்த தகவல் பறிமாற்றத்திற்காக ‘கொரோனா மானிட்டரிங்’ என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த செயலியை சென்னையில் உள்ள அனைவரும் பதிவிறக்கம் செய்து வைத்து, இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி ஏதேனும் இருந்தால், செல்போனில் ஒரு செல்பி எடுத்து, இந்த செயலியில் விவரங்களை பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவிட்டவுடன், அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, மருத்துவக்குழு அவர்களது வீட்டிற்கு சென்று உதவி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.