#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழகத்தில் இன்றுமட்டும் இவ்வளவு கொரோனா பாதிப்பா..? மொத்த பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?
தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5697 பேருக்கு koronaa வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாளிலிருந்து அன்றாட நிலவரம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத் துறை தினம் தினம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று வெளியான அறிவிப்பில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5697 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 208 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று வெளியான செய்திக் குறிப்பில் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா நோயினால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8502 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சற்று ஆறுதலாக இன்று ஒரே நாளில் 5735 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தற்போது வரை 46 ஆயிரத்து 806 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.