திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உங்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா.? உடனே இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள்! தமிழக அரசு அதிரடி!
சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தியகுடியரசு மாளிகையில் திட்டமிடப்பட்டிருந்த ஹோலிப்பண்டிகை நிகழ்ச்சிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுத்து வருகின்றனர். இந்நிலையில் 24 மணி நேர கொரோனா உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
044-29510400, 044-29510500, 94443 40496, 87544 48477.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் மேற்காணும் தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்புக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட எண்களுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தொடர்பு கொண்டால், அரசு மருத்துவ குழு உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதித்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? என்று தீர்மானிப்பார்கள். இந்த தகவலை பகிர்ந்து பயனடைய செய்வோம்.