தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா.! விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!



corona increased in tamilnadu

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

தமிழகத்திலும் கோரினா பரவல் குறைந்துகொண்டே வந்தது. ஆனால் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில், மஹாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று கணிசமான அளவில் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. 

coronaஇந்தநிலையில் பொதுமக்கள், கொரோனா குறித்து பயமில்லாமல் முக கவசங்களை அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்படுவதாகவும், இன்னும் சில நாட்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.