#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மக்களே உஷார்.!! தமிழகத்தில் அசுரவேகத்தில் வேகமெடுக்கும் கொரோனா.! நேற்று ஒரேநாள் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?
உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா பரவல் சமீப காலமாக ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமெடுக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,76,413 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 4531 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த பலி எண்ணிக்கை 36,833 ஆக உயர்ந்துள்ளது.