மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களுக்கு மிக முக்கியமான தகவல்!! குறைகிறது தடுப்பூசி காலம்.. வெளியான புது தகவல்..
கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு தவணைகளுக்கான இடைவெளி காலம் குறையலாம் என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இந்தியாவிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும்பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசியை கோவிஷீல்ட் என்ற பெயரில் இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்துவருகிறது.
இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கான இடைவெளியானது முதலில் நான்கு முதல் 6 வாரங்களாக இருந்த நிலையில், அதன்பின் 6 முதல் 8 வாரங்களாக உயர்த்தப்பட்டது. அதன்பின் கோவிஷீல்டு தடுப்பூசி அதிக நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதாக கூறி இடைவெளி காலம் 12 முதல் 16 வாரங்களாக மாற்றியமைக்கப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, கோவிஷீல்ட் தடுப்பூசியின் கால இடைவெளியை குறைக்க மத்திய அரசு ஆலோசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.