நாளை வீட்டிலேயே இருக்க இன்றே மெரினா கடற்கரையில் கூடிய மக்கள்! ஏன் தெரியுமா.!



Coronavid19

சீனாவின் உஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 300க்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்வதற்கு அதிக நேரத்தினை அரசு வழங்கிவிட்டது. 

corona

ஆனாலும் பொதுமக்கள் அசால்ட்டாக வெளியில் கூட்டம் கூட்டமாக சென்றுவருவதை பார்க்கும்பொழுது வருத்தமளிக்கிறது.  நாளை சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இன்றைய தினம் சென்னையில் பொதுமக்கள் தீபாவளி தினத்தன்று முதல் நாள் போலவே உலா வருகின்றனர். 

இன்றைய தினம் சென்னை பட்டிணம்பாக்கம் கடற்கரை முதல் மெரினா வரை பொதுமக்கள் மீன் வாங்குவதற்க்காக ஒரே இடத்தில் ஒன்று கூடியுள்ளனர்.  இன்றைய தினம் முழுவதும் கடற்கரை ஓரம் முழுவதும் திருவிழாவை போலவே காட்சியளித்தது.

corona