#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கேரளாவை முந்தி இரண்டாவது இடத்திற்கு சென்றது தமிழகம்.! டெல்லி மாநாட்டால் தமிழகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு.!
தமிழத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இன்று 75 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2 வது இடத்திற்கு சென்றுள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா, டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்றுவந்த விவகாரத்தை அடுத்து சில நாட்களிலையே அதிகரிக்க தொடங்கிவிட்டது.
நேற்றுவரை 234 ஆக இருந்த பாதிப்பு இன்று 309 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்திற்கு சென்றுள்ளது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் 416 , இரண்டாவது இடத்தில் தமிழகம் 309 , மூன்றாம் இடத்தில் கேரளா 286.