மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.1.50 கோடிக்கு விற்பனையான பருத்தி!!
வெள்ளக்கோவிலை அடுத்துள்ள மூலனூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாராவாரம் வியாழக்கிழமை அன்று பருத்திக்கான ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இதில் அக்கம் பக்கக் கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் அவர்கள் விளைவித்த பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்த பருத்தியை பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் விவசாயிகள் ஏலத்தில் பங்கு பெற்று அவர்களுக்கான பருத்தியை பெற்று செல்வார்கள்.
அந்த அடிப்படையில் இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் சுமார் 2,122 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் ரூ.6,450 முதல் ரூ.7,828 வரை விற்பனையானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மொத்தமாக ஏலத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் பருத்தி விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.