மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஷம் குடித்து தம்பதியினர் தற்கொலை: விசாரணயில் வெளியான பகீர் தகவல்..!
திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூர் எஸ்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் தச்சுத்தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி வசந்தா (55). இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் திரும ணமாகி திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலை யில் வசந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தினந் தோறும் மருந்து , மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த தம்பதியினர் இருவரும் கடந்த வாரம் வசந்தாவின் தாயார் செல்லம்மாளிடம் தங்களுக்கு வாழப்பிடிக்கவில்லை என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்களது வீட்டுக்கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்துள்ளனர்.
அப்போது அவர்கள் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இந்த சம்பவம் குறித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், தம்பதியினரின் உடல்களையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த னர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக் குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.