மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள்.! நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு நீதிமன்றம் வேண்டுகோள்.!
சோப்பு முதல் வீடு வரை எந்தப் பொருளாக இருந்தாலும் நடிகையோ, நடிகரோ, கிரிக்கெட் வீரரோ வந்து சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் பல மக்கள். தற்போது அதையும் தாண்டி ஆன்லைன் சூதாட்டங்களுக்கு பிரபலங்கள் விளம்பரத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவும், இந்த விளையாட்டுகளை பிரபலப்படுத்தும் விளம்பரங்களில் நடித்து வரும் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக்கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுவில் குறிப்பிட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், நடிகைகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்களை லட்சக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர். அந்த பிரபலங்களை தங்களின் எதிர்காலமாக கருதி வாழ்கின்றனர்.
எனவே இந்தச் சூழலில் அந்த பிரபலங்கள் சூதாட்ட விளம்பரங்களில் நடித்து அதனை ஊக்குவிக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த பிரபலங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக அவர்களிடம் கூறுங்கள் என நீதிபதிகள் தெரிவித்ததுடன் இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.