மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை..! குற்றவாளி மீதான குண்டர் சட்டம் ரத்து..!!
சென்னையில் உள்ள பரங்கிமலை காவல் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சத்யப்ரியா. இவர் கல்லூரி பயின்று வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த சதிஷ் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இவர்களின் காதலை சத்யப்ரியாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சத்யப்ரியா, சதீஷுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் சதீஷ் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார். இது குறித்து வழக்கு பதிவிட்டு கைது செய்து சதீஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து சதீஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போட்டு சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளி சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.