மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சசிகலா புஷ்பா சம்பத்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!.
எம்.பி. சசிகலா புஷ்பா தொடா்பான தரக்குறைவான வீடியோ, புகைப்படங்களை நீக்க வேண்டும் என்று கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு டெல்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சார்பில்ட் டெல்லி உயர் நீதிமன்றத்தில் திடீரென வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் தன் பெயரை கெடுக்கும் வகையில் தவறான சித்தரிக்கப்பட்ட படங்களை சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டதாகத் கூறியிருந்தார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பா தொடா்பான வீடியோக்கள், புகைப்படங்கள் தொடா்ந்து சமூக வலைதளங்களில் வலம் வருவதையும், அதன் இணையதள முகவரிகளையும் சசிகலா தரப்பு வழக்கறிஞா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
வளகரிகர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, சசிகலா புஷ்பா குறித்து அவதூறு பரப்பும் வகையில் இருக்கும் தகவல்கள் அடங்கிய இணையதள முகவரிகளை நிரந்தரமாக நீக்குமாறு ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் உத்தரவிட்டார்.