திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தலைக்காட்டில் இரத்த வெள்ளத்தில் திருநங்கையின் உடல்.. சிதம்பரத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.!
பி.முட்லூர் பகுதியில் உள்ள தைலக்காட்டில் திருநங்கை கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன் நகர் சாமிசெட்டிபட்டி, போலன நல்லம்பள்ளி கிராமத்தை சார்ந்தவர் பனிமலர் (வயது 30). இவர் திருநங்கையாக ஆவார். கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு வருகை தந்த பனிமலர், சிதம்பரத்தை அடுத்துள்ள மணலூரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை பரங்கிப்பேட்டை அருகேயுள்ள பி. முட்லூர் பகுதியில் உள்ள தைலக்காட்டில் பனிமலர் வெட்டுக்காயத்துடன் பிணமாக இருந்துள்ளார். இவரது முகம் மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் இருந்துள்ளது. இதனால் அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தது உறுதியானது.
இரத்த வெள்ளத்தில் இருந்த உடலை கண்ட அப்பகுதி மக்கள், பரங்கிப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் தேவி தலைமையிலான காவல் துறையினர், பனிமலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் பனிமலரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.