திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தந்தை கண்முன் மகள் துடிதுடிக்க உயிரிழப்பு: இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதால் துயரம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியைச் சார்ந்தவர் ஜம்புலிங்கம். இவர் சம்பவத்தன்று தனது மகள் தனுஷிகாவுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். சிறுமி அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
தந்தையும், மகளும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தந்தை ஜம்புலிங்கம் படுகாயமடைந்த நிலையில், அவரின் கண் முன்னே மகள் தனுஷிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து ஜம்புலிங்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிடவே, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.