மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கரம்.. 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!
கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 13 வயது சிறுவன் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த கள்ளையன்குப்பம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் தரணிதரன் (வயது 13). இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென சிறுவன் தரணிதரன் மீது விழுந்துள்ளது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடித்துடித்து உயிரிழந்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.